தம்பிக்கு குரல் கொடுத்த அண்ணன்!

கடந்த ஆண்டு கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மறைவு நாம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் பின்னணி பாடகராகவும், தொலைக்காட்சி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் கன்னட சினிமாவில் தனது பன்முக திறமைகளை வெளிக்காட்டி வந்தார்.

இவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு ஆக்டோபர் 29, 2021-ஆம் ஆண்டு மறைந்தார். தன் மறைவிற்கு பிறகு தன் கண்ணை தானம் செய்தார். இவர் இறப்பதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்தார். சில திரைப்படங்களில் நடித்து முடித்தும் இருந்தார். இயக்குனர் சேத்தன் குமார் இயக்கத்தில், நடிகர் புனீத் குமார் கதாநாயகனாக நடித்து உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜேம்ஸ்’.

இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பிரியா ஆனாந்த், ஸ்ரீகாந்த் மேகா, அனுபிரபாகர் போன்ற பலர் நடித்திருந்தார்கள். சமீபத்தில்தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகுகிறது. இந்த திரைப்பட புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச்-17 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். தற்போது இந்த திரைப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தில் அவர் புனீத் குமார் நடித்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் அவரது அண்ணன் நடிகர் சிவராஜ் குமார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…