51-வது படத்தில் நடிக்க ரெடியான ஜோதிகா!

நடிகை ஜோதிகா சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன் பின் மீண்டும் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க துவங்கி உள்ளார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாகிக்பாட், பொன்மகள் வந்தால் உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஜோதிகா நடித்த 50-வது படமான உடன்பிறப்பு சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்து 51-வது படத்தில் நடிக்க ஜோதிகா ரெடியாகி உள்ளார். சில இயக்குனர்கள் அவரிடம் கதையும் சொல்லி உள்ளார். தற்போது ஜோதிகா குடும்ப கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களை இயக்கிய பிரியா சொன்ன கதை பிடித்துள்ளதாகவும், அதில் நடிக்க ஜோதிகா முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…