புனீத் ராஜ் குமார் வீட்டிற்கு சென்ற அல்லு அர்ஜுன்!

தெலுங்கில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து இருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

‘புஸ்பா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகவும் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். விரைவில் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்றும் படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். சமீபத்தித்தான் புஷ்பா படத்தின் ‘ஸ்ரீ வள்ளி’பாடலுக்கு அல்லு அர்ஜுன் ஆடிய நடனம் இணையத்தில் வைரலானது.

தற்போது மீண்டும் அல்லு அர்ஜுனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ் குமாரின் வீட்டிற்கு அல்லு அர்ஜுன் சென்றுள்ளார். புனீத் குமாரின் குடும்பத்தினரிடம் சந்தித்து பேசி அவர்களுக்கு அறுதல் தெரிவித்தார் நடிகர் அல்லு அர்ஜுன். மேலும் அந்த புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…