சிவகார்த்திகேயனின் ‘BAE’ ஆகா வருகிறார் பிரியங்கா அருள் மோகன்!

இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் டான்.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கிய இந்த திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, சமுத்திரகனி சூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருகிறார்கள். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.

லைகா புரொடக்ஷன் மற்றும் SK புரொடக்ஷன் இணைந்து ‘டான்’ திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இதற்கு முன் டான் திரைப்படத்தின் பல போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் லோகேஷ் எழுதிய ‘ஜல புல ஜங்’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இன்று மீண்டும் ‘டான்’ படத்தை பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. டான் படத்தின் மூன்றாவது சிங்கள் விடியோவான ‘BAE’ பாடல் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை போஸ்டருடன் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த தகவலை கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…