ஷாலினி அஜித் பெயரில் போலியான கணக்கு….

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடந்த இரண்டு வருடமாக எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. பல நாட்கள் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று வலிமை படத்தின் ரீலிஸ் தேதி வெளியானது. இன்று காலை படக்குழுவினர் வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

இரண்டு வருடங்கள் இவர் நடிப்பில் படம் வெளியாகவில்லை என்றாலும் இவருக்கு ரசிகர்கள் குறைந்தபாடு இல்லை. நடிகர் அஜித் குமாரை ரசிகர்கள் அனைவரும் ‘தல ‘ என்று பல வருடங்களாக அழைத்து வந்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு அஜித் குமார் தனது ரசிகர்களுக்கும், பத்திரிகை துறையினருக்கும் தன்னை பற்றி குறிப்பிடும் போது இனி ‘தல’ என்று குறிப்பிடாமல் அஜித்குமார். எ.கே என்று குறிப்பிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவர் வெற்றி நடிகராக இருந்தாலும் தனிமையை விரும்பும் நடிகர். பொதுவாக தனது ரசிகர்களை இவர் சந்திப்பதே கிடையாது. சமீபத்தில் இவர் இருசக்கர வாகனத்தில் இந்தியா முழுக்க சுற்று பயணம் மேற்கொண்டார். அஜித் குமார் நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிட்ட நடிகை ஷாலினி தற்போது டுவிட்டரில் இருப்பதாக பல செய்திகள் பரவின.

நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமாருக்கு டுவிட்டர் கணக்குகள் எதுவும் இல்லை என்றும் அவரது பெயரில் போலியாக கணக்கு செயல்பட்டு வருகிறது என்று அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திர விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…