வெளியானது வலிமை ரிலீஸ் தேதி!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். இரண்டு வருடங்களுக்கு மேல் இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாக வில்லை. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த திரைப்படத்தின் பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. வலிமை திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக படத்தின் ரீலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். வலிமை அப்டேட்டிற்காக ஒருகாலத்தில் அஜித் ரசிகர்கள் தவமாய் தவம் இருந்தார்கள். கொரோனா கட்டுப்பாட்டால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். 100 சதவீத பார்வையாளர்களை அனுபதிக்கும் பொது வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

தற்போது சூப்பரான ஒரு வலிமை படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிப்ரவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வலிமை படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…