19-ம் ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி உடன் இணையும் இசையமைப்பாளர்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் கடைசியாக தமிழில் அரண்மனை திரைப்படத்தை இயக்கி இருந்தார். நடிகர் சுந்தர்.சி யின் படங்களுக்கு என்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து வந்தார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ளர். புதிதாக சுந்தர்.சி இயக்கும் படத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு சூப்பர் டூப்பர் காமெடி படத்தை இயக்க உள்ளார். இந்த படம் இந்தியில் வெளியான கபூர் & சன்ஸ் என்ற படத்தின் தழுவலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது, சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக ஊட்டியில் படப்பிடிப்பை நடத்தி மொத்தமாக ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை முடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் இன்னொரு அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மூலம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர்.சி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைய உள்ளனர். கடைசியாக இவர்கள் கூட்டணியில் 2003-ஆம் ஆண்டு வெளியான வின்னர் திரைப்படம் பெரிய ஹிட் ஆனது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…