மகனின் பிறந்தநாளை ரகசியமாக கொண்டாடிய நடிகர்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் எப்.ஐ.ஆர். இந்த திரைப்படத்தின் வெளியிட்டு தேதியை இன்றுதான் படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை காதலித்து கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆரியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனாலும் விஷ்ணு விஷால் தனது மகன் மீது மிகுந்த அன்புடன் இருந்து வருகிறார். இந்தநிலையில் அண்மையில் அவர் தனது மகனின் பிறந்தநாளை மிகவும் எளிமையாக தன் வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…