‘டைகராக’ களம் இறங்கும் விக்ரம் பிரபு!

நடிகர் திலகத்தின் பேரனும், பிரபல நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தமிழில் ‘கும்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். தொடர்ந்து இவர் தமிழில் இவன் வேறமாதிரி, சிகரம் தோடு, வெள்ளக்கார துறை, இது என்ன மாயம், புலிக்குட்டி பாண்டி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.’

தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மேலும் தனக்காரன், பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்களின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது.

தற்போது மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘டைகர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் கார்த்தி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். முத்தையா அவர்கள் ‘டைகர்’ படத்தின் வசனம், திரைக்கதை எழுதியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ஓபன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறார்கள். ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்க பிக் பாஸ் சக்தி மற்றும் டேனியல் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இன்று இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது. இதை படக்குழுவினர் தங்களது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…