முதல் முதலில் கார்த்தியுடன் ஜோடி சேரும் சமந்தா!

தமிழ் சினிமாத்துறையில் முக்கிய நடிகையாக வளம் வருபவர் நடிகர் சமந்தா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பேமிலி மேன் வெப் சீரியஸ் நல்ல வரவேற்பை பெற்றாலும் சர்ச்சைக்குள்ளானது. அதே போல் புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் பாடலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் மாபெரும் சர்ச்சைக்குள்ளானது.

மேலும் நடிகை சமந்தா மற்றும் நாகா சைதன்ய இருவருக்கும் விவகாரத்தானது அனைவரும் அறிந்த ஒன்றே. தொடர்ந்து சமந்தா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். மேலும் சமந்தா ஹாலிவுட் திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா மீண்டும் தமிழ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். நடிகர் கார்த்தியுடன் அவர் முதன்முதலாக ஜோடி சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை பேச்சுலர் பட இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்க இருக்கிறார். சமந்தா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…