வெளியான தகவல்….மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

டிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அனுமோகன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் இணைந்து வினை ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ். பாஸ்கர் போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இமான் இசை அமைத்திருக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

முதலில் எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். பின்பு கொரோனா பரவல் காரணமாக பல திரைப்படத்தின் தேதிகள் மாற்றிவைக்க பட்டது. அதே போல் இந்த திரைப்படத்தின் ரீலிஸ் தேதியும் மாற்றி உள்ளதாக கூறப்பட்டது. தற்போது இந்த திரைப்படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘எதற்கும் துணிந்தவன்’ வருகிற மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த செய்தியால் தற்போது சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…