“கங்குபாய் கத்யாவாடி” ரிலீஸ் தேதி வெளியானது!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் அலியா பாட். இவர் இந்தியில் குழந்தை நட்சத்திரமாக தன் நடிப்பு திறமையை துவங்கி, 2012-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்டுடென்ட் ஆப் தி இயர்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தி இவர் நடிப்பில் கல்லி பாய், கலங்க், சதக்-2 போன்ற பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

அலியா பாட் கங்குபாய் கதிவாடி, ஆர்.ஆர்.ஆர், ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள். இதை தாண்டி ப்ரம்மாஸ்திர, டார்லிங்ஸ், ராகி அவுர் ராணிக்கே பிரேம் காக்காணி ஆகிய படங்களில் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.

முதலில் ‘கங்குபாய் கைத்தவாடி’ திரைப்படம் ஜனவரி 6-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். ஜனவரி 7-ஆம் தேதி ஆர்.ஆர்.ஆர் வெளியாகும் என்றும் அறிவித்து இருந்தனர். இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்பதால் ஒரேய நாளில் வெளியிட்டால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தேதியை மாற்றி வைத்தனர். தற்போது ராஜமௌலி இயக்கத்தில் அலியா பாட் நடித்த திரைப்படம் வருகிற மார்ச் -25 ஆம் தேதி வெளியாகும் என்றும், அதற்கு முன் பிப்ரவரி 25ஆம் தேதி “கங்குபாய் கத்யாவாடி” ரிலீஸாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்க்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…