எப்.ஐ.ஆர் ரீலிஸ் தேதி வெளியானது!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை தேடி வந்தது. தற்போது விஷ்ணுவிஷால் தானே தயாரித்து மற்றும் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் எப்.ஐ.ஆர்.

இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பை இந்த குழுவினர் தொடங்கினர். ஆனால் கொரோனாவால் இந்த திரைப்படத்தின் பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தது.மேலும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சமீபத்தில் இந்த திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று பல செய்திகள் பரவின. அப்போது விஷ்ணு விஷால், இது தவறான செய்தி விரைவில் ரீலிஸ் தேதியை பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறி இருந்தார். தற்போது அறிவித்த படியே படத்தின் ரீலிஸ் தேதியை போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) / Twitter

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…