வெளியானது ‘மஹான்’ படத்தின் டீசர்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்பரன் என பல பிரபலங்கள் இணைத்து நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மஹான். இந்த திரைப்படம் நடிகர் சியான் விக்ரமின் 60-ஆவது திரைப்படமாகும். இவரின் 60-வது திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக், பாடல்கள் என பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் சமீபத்தில் தான் இந்த படத்தில் நடித்த பலரின் கதாபாத்திரத்தை வெளியிட்டு இருந்தார்கள். முதலில் மஹான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டது. பிறகு அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

தற்போது நடிகர் விக்ரமின் ரசிகர்களுக்கு ஒரு புதிய அப்டேட் வெளியாகி மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ‘மஹான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டீசரை பார்க்கும் பொது விக்ரம் காந்தி மஹான் என்ற கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார். டீசர் முழுவதும் மது அருந்தி வருகிறார் விக்ரம். இந்த படத்தில் வில்லனாக வருகிறார் துருவ் விக்ரம்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…