வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டான்’ ரீலிஸ் தேதி!

இளம் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் டான். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சிபிச் சக்கரவர்த்தி இயக்கிய இந்த திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, சமுத்திரகனி சூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருகிறார்கள். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.

லைகா புரொடக்ஷன் மற்றும் எஸ்கேப் ரெடக்ஷன் இணைந்து டான் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.இதற்கு முன் டான் திரைப்படத்தின் பல போஸ்டர்கள், பாடல்கள் என பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் லோகேஷ் எழுதிய ஜல புல ஜங் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.

ரசிகர்கள் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். முதலில் படக்குழுவினர் இந்த திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ரீலிஸ் தேதி மாற்றிவைக்கப்பட்டு இருந்தது. தற்போது ‘டான்’ திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…