மார்ச்சில் வெளியாக இருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்!

ராஜா மௌலி இயக்கத்தில், 400 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், அலியா பாட், அஜய் தேவன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். எம்.எம். கீராவணி இசையில் டி.வி.வி தனைய தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

முதலில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 6-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில் திரையரங்குகளிலும் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் தேதி மாற்றிவைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள்.

இன்று ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் மீண்டும் படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாவதற்கு படம் தயாராக இருக்கிறது என்றும், வருகிற மார்ச் 25-ஆம் தேதி படம் வெளியாகும் என்று பாடல்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…