இந்தியாவில் அதற்கான வாய்ப்பு இல்லை-நீது சந்திரா!

தமிழில் மாதவனுக்கு ஜோடியாக யாவரும் நலம் படத்தில் நடித்து பிரபலமானவர் நீது சந்திரா. தொடர்ந்து விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆர்யாவின் சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கராத்தே பயிற்சி பெற்றவர்.

நீதுசந்திரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த நெவர் டாக் டவுன், ரிவோல்ட் என்ற ஹாலிவுட் படம் கடந்த ஆண்டு ரிலீசானது. இதில் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்திருந்தார். நீது சந்திரா அளித்துள்ள பேட்டியில் எனக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைக்க மறைந்த நடிகர் இர்பான் கான் காரணம்.

அவர்தான் ஹாலிவுட்டில் உள்ள சில ஏஜென்டுகளை தொடர்பு கொள்ள உதவி செய்தார். ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்காக கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறேன். நான் தற்காப்பு கலையை கற்று உள்ளதால் அது போன்ற படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. இந்தியாவில் அதற்கான வாய்ப்பு இல்லை. ஆதனால்தான் ஹாலிவுட் பட வாய்ப்புகளை தேடுகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…