அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார்!

வலிமை திரைப்படத்தின் ரீலீசிற்க்காக அஜித் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து இருக்கிறார்கள். பொங்கலுக்கு வெளியாவதாக கூறி பின்பு கொரோனா பரவலால் இந்த படத்தின் ரீலிஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. வலிமை படம் தற்போது வெளியாவதற்கு தயாரான நிலையில் உள்ளது. இந்த படம் அடுத்தமாதம் இறுதியில் அல்லது மார்ச் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அஜித் குமார் மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

அஜித்தின் 61-வது படத்தையும் இயக்குனர் வினோத்தான் இயக்குகிறார். சமீபத்தில் வெளியான தகவல் படி இந்த திரைப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளையும் தொடங்கியுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இதற்காக ஐதராபாத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அஜித் குமார் படபிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது.

அஜித்தின் 61-வது படத்திற்கான நடிகர்-நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் அஜிதிற்கு ஜோடியாக நடிக்க பிரபல இந்தி நடிகை தபு நடிக்க உள்ளதாக தகவல் பரவுகிறது. படத்தின் கதைக்கு வயதான கதாநாயகி தேவை என்பதால் தபுவை பரிசீலிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

Buzz: Mohanlal to share screen space with Ajith in 'AK 61' | Tamil Movie  News - Times of India

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…