யூடியூபில் இருந்து நீக்கப்பட்ட ட்ரைலர் வீடியோ!

தமிழில் அஜித்தின் ஆரம்பம், சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படங்களில் நடித்துள்ளவர் மகேஷ் மஞ்ச்ரேகர். இவர் பிரபல இந்தி நடிகர் ஆவார். சில திரைப்படங்களை இயக்கவும் செய்துள்ளார். மகேஷ் மன்ரேகர் தற்போது ‘நய் வரன் பாட் லோஞ்சா கோன் நய் கோஞ்சா’ என்ற மராத்தி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

ட்ரெய்லரில் சிறுவர்களை ஆட்சேபத்துக்குரிய வகையில் சித்தரித்து இருப்பதாகவும் ஆபாசமான காட்சிகள் இருப்பதாகவும், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தேசிய மகளிர் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ட்ரைலர் யூட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் படம் ரிலீசான நிலையில் அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளை சர்ச்சைக்குரிய வகையில் காட்சிப்படுத்தி இருப்பதாகவும், படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், ஷத்ரிய மராத்தா சேவா சன்ஸ்தா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மகேஷ் மஞ்ச்ரேக்கர் மீது பாந்த்ரா மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. மகேஷ் மஞ்ச்ரேக்கர் கூறும்போது இது வயது வந்தோருக்கான படம். தணிக்கை குழுவினர் எனது படத்தை பார்த்து அனுமதி வழங்கி உள்ளனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…