நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று!

தமிழில் பிரபுதேவாவுடன் மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜோல். வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் தனுசுடன் இணைந்து நடித்து இருந்தார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கஜோலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தோற்று உறுதியான தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கஜோல் பகிர்ந்துள்ளார். தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கஜோல் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்தி வருகிறார்கள். கொரோனா மூன்றாவது அலையில் நடிகர்கள், நடிகைகள் தொடர்ந்து கொரோனவால் பாதிப்படைந்து வருகிறார்கள்.

இது திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏற்கனவே கமல் ஹாசன் , ஜெயராம், சத்யராஜ், மம்முட்டி, துல்கர் சல்மான், அருண் விஜய், விஷ்ணு விஷால், வடிவேல், சுரேஷ் கோபி, திரிஷா, கீர்த்தி சுரேஷ், ஷோபனா, மீனா, லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிலர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…