ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறதா ராதே ஷ்யாம் திரைப்படம்?

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். இந்த திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசை எஸ்.தமன் அமைத்திருந்தார். பூஷன் குமார், வம்சி, பிரமோத் பிரசிதா தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள், டீஸர், டிரெய்லர் என பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இருந்தது. ஆனால் இந்தியா முழுவதும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்துள்ளதை அடுத்து பல திரைப்படங்களில் தேதி மாற்றி வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இத்திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்படும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்த நிலையில், இசையமைப்பாளர் தமன்.எஸ், “ராதே ஷ்யாம் திரையரங்குகளில் மட்டுமே ரிலீசாகும்” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும் “உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் மட்டுமே சந்திப்பேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே ராதேஷ்யாம் படம் கட்டாயம் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *