அமேசான் பிரைமில் வெளியாகும் மோகன் லாலின் பிரமாண்ட திரை படம்!

மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருபவர் நடிகர் மோகன்லால். இவர் நடிப்பில் வெளியான திரிஷியம் திரைப்படம் மலையாளத்தில் மாட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பெரிதும் பேசபட்ட ஒரு திரைப்படம்.மேலும் இந்த திரைபடத்தை தமிழில் பாபநாசம் என்ற ரீமேக்கில் உலகநாயகன் கமல் நடித்து இருந்தார். இந்த திரைபடத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்தார்கள். நடிகர் மோகன் லால் தமிழல் தளபதி விஜயுடன் இணைத்து ஜில்லா திரைப்படத்தில் நடித்து இருப்பார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள வரலாற்றுப் திரைபடம் , ‘மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. இந்த திரை படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அணைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தமிழில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுவதாக அறிவித்திருந் தார்.16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவரான குஞ்சாலி மரைக்காயரின் வரலாறாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. குஞ்சாலி மரைக்கார், கடல் அனுபவம் கொண்ட வீரர்களை ஒன்று திரட்டி, கடற்படையை உருவாக்கி, போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகப் போராடியவர். இதில், குஞ்சலி மரைக்காயராக மோகன்லால் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவருடன் இணைத்து கீர்த்தி சுரேஷ்,பிரபு, சுகாசினி, சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைபடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக படம் வெளியாவதற்கு தாமதமானது. இந்தநிலையில் தற்போதுதான் திரையரங்குக்கு கேரளாவில் திறந்து இருக்கின்றனர். ரளாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும் படக்குழுவினர் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அமேசான் பிரைமுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் ரூ.90 கோடியில் இருந்து ரூ.100 கோடிக்கு இந்தப்படம் விலை பேசப்பட்டிருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அமேசான் பிரைமில் வெளியாக இருக்கும் பெரிய பட்ஜெட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *