சசிகுமாருடன் இணைந்த மெடோனா!

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரும் வெற்றியைக் குவித்தது. சுந்தரபாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன். இவரும் சசிகுமாரும் இணைந்து ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள்.
கிராமத்து பின்னணியில் தென் தமிழக மக்களின் வாழ்வியலை இயல்பாக சித்தரிக்கும் திரைப் படமாக அமைந்திருக்கும் இந்த திரைப்படம். மேலும் சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. செயலின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகவும் ஈர்த்துள்ளது.
திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் பேசியதாவது, என் படத்தில் வசன வரிகள் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். உதாரணத்துக்கு சுந்தரபாண்டியன் படத்தில் இடம்பெறும் குத்துனது நண்பனா இருந்தா செத்தாக்கூட சொல்லக்கூடாது என்ற வசனத்தை கூறலாம். இதுபோன்ற ரசிக்கும்படியான வரிகள் கொம்பு வச்ச சிங்கம்டா படத்திலும் இடம்பெற்றுள்ளது.
இப்போதெல்லாம் எவன் முகத்தையாவது பார்த்து நல்லவன் யார் கெட்டவன் யாருன்னு சொல்லு பாப்போம் என்ற வசன வரிகள் போது ஒரு உதாரணம். என்று படத்தைப் பற்றியும் படத்தின் வசனங்களை பற்றியும் இயக்குனர். இந்த திரைப்படத்தில் முதன் முறையாக சசிகுமாருடன் ஜோடி சேர்கிறார் மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகை மடோனா செபாஸ்டின்.
