சட்டம் வலுவான ஆயுதம்… அனல் பறக்கும் வசனங்களோடு வெளியானது ஜெய்பீம் டிரெய்லர்!

சூர்யா நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ஜெய்பீம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பழங்குடியினருக்கு நடந்த அநீதிக்கு எதிராக நீதி கேட்டும் போராடும் வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இதனை சூர்யாவின் 2டி எண்டர்ட்யின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2-ஆம் தேதி வெளியாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெய்பீம் அனல் பறக்கும் வசனங்களோடு ஜெய்பீம் படத்தின் டீசர் வெளியாகி தாறுமாறு வைரலானது. தற்போது படத்தின் டிரெய்லரை படக்குழு அமேசான் இந்தியா யூ-டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ‘சட்டம் என்பது வலுவான ஆயுதம்’, ‘தப்பு பண்றவங்களுக்கு பதவி, பணம், சாதியின்னு நிறைய இருக்கு, பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம தானே இருக்கோம்’ போன்ற மாஸான வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. சரவெடியாய் வெடிக்கும் ட்ரெய்லர் இதோ…