ஏழைகளின் நலனுக்கா பாடுபடுவேன்-ஆரியன்கான்!

பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகரான ஷாருக்கானின் மகன் சமீபத்தில் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் வழக்கில் கைதான டெல்லி ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் சிறையில் மற்ற கைதிகள் போல்தான் நடத்தப்பட்டு வருகிறார்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட கொடூரக் குற்றங்களைச் செய்த கைதிகள் இருக்கும் வரையில்தான் ஆரியன் இருக்கிறார். சிறையில் ஆர் என் கால் ஒவ்வொரு நாளும் தவிப்போடு கழித்து வருகிறார். மேலும் இளம் நடிகரான ஆரியன்கானுக்கு போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளும், தொண்டு நிறுவனத்தினரும் கவுன்சிலிங் அளித்து வந்தனர்.

அவர்களிடம் ஆரியன்கான் தான் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே விடுதலையான பிறகு நீங்கள் பெருமைப் படும்படியான நல்ல பணிகளைச் செய்வேன் என உறுதிமொழி அளித்து இருக்கிறார் என அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஏழைகளின் நலனுக்காகவும் அவர்களின் பொருளாதார சிக்கல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் நான் பாடுபடுவேன். தீய வழிகளில் இனி செல்ல மாட்டேன் என்றும் கூறியதாக அந்த அதிகாரி தெரிவித்தார். ஆரியன் கானுக்கு ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரது ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணை நடக்கவுள்ளது.