நடிகர் அமீரக்கான் திருமணமானதை மறைத்தார்-மஹிமா!

1990-களில் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மஹிமா சவுத்ரி. இவர் இந்தித் திரையுலகில் தட்கன், குருஷேத்திரா, தில் ஹை தும்ஹரா உள்ளிட்ட பல மிகப்பெரிய வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். இவர் தான் சினிமாத்துறையில் இருந்தபோது சினிமாத்துறை எப்படி இருந்தது என்பதை பகிர்ந்துள்ளார்.
அதில் மகிமா கூறியதாவது தனது காலத்தில் சீமதுறை மோசமாக இருந்ததாகவும், கன்னித் தன்மையுடன் இருக்கும் பெண்களுக்கே நடிக்க வாய்ப்பு அளித்தது என்றும் சாடியுள்ளார். இதுகுறித்து மஹிமா சவுத்ரி பேட்டியில் இப்போதைய நடிகைகளில் நிலைமை நன்றாக உள்ளது. இப்பொழுது இருக்கும் கதாநாயகிகளுக்கு நல்ல கதாபாத்திரங்கள், நல்ல சம்பளம் நல்ல விளம்பர பட வாய்ப்புகள் போன்ற பல விஷயங்கள் கிடைத்து வருகின்றன.
மேலும் நடிகைகள் தற்போது நீண்ட காலம் சினிமாத்துறையில் நிலைத்திருக்கவும் முடிகிறது. ஆனால் 1990 களில் ஒரு நடிகை காதலித்தாலே அவரை ஒதுக்கி விடுவார்கள். முத்தமிடாதே கன்னித் தன்மையுடன் இருக்கும் நடிகைகள்தான் இயக்குனர்கள் எடுக்க விரும்புவார்கள். திருமணமான ஆனாலே கதாநாயகிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காது.
ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் கதாநாயகிக்கு திருமணமானாலும் அல்லது குழந்தை இருந்தாலும் அதை யாரும் ஒரு குறையாக பார்ப்பது கிடையாது. முன்பெல்லாம் அது ஒரு மிகப் பெரிய குறையாகவே பார்க்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நடிகர் அமீர் கான் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களுக்கு திருமணம் ஆனதை கூட மறைத்தார்கள். குழந்தை இருப்பதையும் பல வருடங்களுக்கு பிறகு வெளிப்படுத்தவும் செய்தார்கள் என்று மகிமா கூறினார்.
