தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தனுஷ்!

நடிகர் தனுஷ் தொடர்ந்து அசுரன், கர்ணன்,போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தார். மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஒ.டி.டி.யில் வெளியானது. இதனால் தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். மேலும் தற்போது ஜகமே தந்திரம் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் இந்தியில் அத்ராங்கிரே திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் நடிகர் தனுஷ் இந்திய திரை உலகை விட்டு ஹாலிவுட்டிலும் பிரேமா என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தமிழில் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், ஆகிய பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் வெகு காலங்கள் கழித்து அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து நானே என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார்.இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வந்துள்ளன. தற்போது நானே வருவேன் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் தனுஷ் கையில் துப்பாக்கியுடன் தலையில் தொப்பியுடன் சுருட்டு பிடித்த படி இருக்கிறார்.

இதற்கு வலைத்தளத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. நடிகர் தனுஷின் கண்டித்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். சிகரெட், சுருட்டு பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வற்புறுத்தி வரும் நிலையில் சுருதி பிடித்தது போல் போஸ் கொடுப்பது நியாயமா? என்று விமர்சித்து உள்ளனர். மேலும் மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்திற்கு திருச்சிற்றம்பலம் என்று தலைப்பு வைத்துதற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
