ஜெயிலில் இருக்கும் மகனுக்கு வீடியோ கால் மூலம் பேசிய நடிகர் ஷாருகான்!

பாலிவுட் டாப் ஹீரோ சாறு காரட் மூத்த மகன் ஆர்யான் கான், போதைப்பொருள் வழக்கில் அக்டோபர் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மும்பைக் கடற்கரையில் சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக ஆர்யான் கான் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஆர்யான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யானை வெளியில் கொண்டுவர ஷாருக்கான் பலவகைகளிலும் முயற்சி செய்தார். ஆனால் மும்பை விசாரணை நீதிமன்றம் 4 முறையும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும் ஆர்யானின் காவலர்கள் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணையும் அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான், பத்து நிமிடங்கள் வீடியோ காலில் பெற்றோருடன் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் சிறையில் உள்ள கைதிகள் வாரத்திற்கு இரண்டு முறை குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசு ஹைகோர்ட் அனுமதி அளித்திருந்தது. மற்ற கைதிகளைப் போல் ஆர்யாவுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே பெற்றோருடன் பேசி அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் வீடியோ காலில் தந்தை ஷாருக் கான் மற்றும் தாய் கவுரியிடம் ஆரியான் கண்கலங்கி பேசியுள்ளார். மகனைப் பார்த்து ஷாருக்கானும் கண்கலங்கிய தாக கூறப்படுகிறது. சிறையில் உள்ள அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாகவும், பொதுவான விஷயங்களில் ஷாருக்கானும் ஆரியானும் பேசிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
