புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சீரியல் நடிகர்!

தமிழ் மக்களிடத்தில் குறிப்பாக தாய்மார்களிடம் தொலைக்காட்சி தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் விருப்பமான ஒரு தொடராக அமைந்துள்ளது.

பாக்யலட்சுமி சீரியல் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் பேவரட் சீரியலாக அமைந்துள்ளது. தனது குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கும் ஒரு பெண்மணி ஆனால் அவரையும் அவர் செய்யும் வேலைகளில் மதிக்காத ஒரு குடும்பம். இந்த கதை பலரது வாழ்க்கைக்கு ஒத்து போக சீரியலுக்கு அதிக ஆதரவை கொடுத்து வருகிறார்கள். இதில் தனது அம்மாவை தெய்வமாக நினைத்து ஒரு சமத்து மகனாக நடித்து வருகிறார் நடிகர் விஷால் என்கிற எழில்.

இந்த தொடரின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் தொலைத்தொடர்பு ஆண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம். காதல் கொண்டாட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய நிகழ்ச்சியை ஜாக்குலினுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறாராம்.
