உள்ளாட்சி தேர்தலில் 110 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி! அடுத்து Beast அப்டேட் தான்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அரசியல் களம் சூடு பிடித்து ஓய்ந்த நிலையில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 169 வேட்பாளர்களில் 110 பேர் வெற்றிப் பெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னோட்டமாக உள்ளாட்சி தேர்தல் களத்தில் பதம் பார்ப்பதாக பலர் கூறி வந்த நிலையில், இந்த வெற்றி அதற்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. தேர்தலுக்கு முன், மக்கள் இயக்கத்தை நிர்வகித்து வந்த விஜயின் தந்தை SA.சந்திரசேகருக்கும் விஜய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் தன்னுடைய புகைப்படங்களை தேர்தல் பரப்புரைகளுக்கு உபயோகிக்க விஜய் அனுமதித்ததை அடுத்து, தந்தை-மகனுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடு சற்று ஓய்ந்தது. இந்த நிலையில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் விஜயின் அடுத்த திரைப்படமான பீஸ்ட் எந்த நிலையில் உள்ளது என்கிற ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகா ஆரம்பித்தது. ஆயுத பூஜை விடுமுறை வருவதையொட்டி பீஸ்ட் அப்டேட் வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையில் #WeWantBeastUpdate என்கிற hashtag ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் முதல் 5 இடங்களுள் ட்ரெண்ட் ஆகா ஆரம்பித்தது.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். அனிருத் இசையில் ஒரு ஸ்பை திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு, பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் நடித்த டாக்டர் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடரந்து பீஸ்ட் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…