மீண்டும் நடிக்கும் லட்சுமி மேனன்!

நடிகர் விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் இருந்தவர் லட்சுமி மேனன். மேலும் லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் ரெக்க படத்தில் நடித்துவிட்டு கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். லட்சுமி மேனன் பத்தாவது படிக்கும்போதே திரையுலகில் கால்பதித்தார். கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த பிறகு சில வருடங்கள் படங்களில் நடிக்கவில்லை. பின்னர் புலிகுத்தி பாண்டு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சில வருட இடைவெளிக்குப் பிறகு ‘ஏஜிபி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Lakshmi Menon (Actress) Height, Weight, Age, Wiki, Biography, Husband,  Affair, Family

இது திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதுவரை வணிக ரீதியான படங்களில் நடித்த லட்சுமி மேனன் முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.ஒரு பெண்ணுக்குள் மூன்று கதாபாத்திரங்கள் நுழைந்து பாதிப்புக்கு உள்ளாகும் கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் வருகிறார். இந்த படத்தை ரமேஷ் சுப்ரமணியன் இயக்கியுள்ளார்.

Actress Lakshmi Menon Homely Look Photo Stills Gallery - TamilScraps.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…