9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே நடிகையுடன் ஜோடி சேரும் விஷால்!

2004-ஆம் ஆண்டு வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகர் விஷால். இவர் தமிழில் செல்லமே திரை படத்தை தொடர்ந்து திமிரு, தாமிரமரணி, சண்டக்கோழி, மலைக்கோட்டை, நான் சிகப்பு மணிதான், மனிதன், பூஜை போன்ற பல திரை படங்களில் நடித்து வந்தார். தற்போது விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘எனிமி’. இந்த திரை படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறாய். இவர்களுடன் இணைந்து மிர்னாலினி, மம்தா மோகன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மேலும் விஷால் இந்த திரை படத்தில் பத்து வருடங்கள் களைத்து மீண்டும் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கிறார். 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் இவன்’ திரைப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் இணைந்து நடித்தது குறிப்பிட தக்கது.மேலும் இவர்கள் இருவரும் நெருங்கி நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக திருமணம் செய்துகொள்ள போவதாக சொல்லி பின் ஆர்யா சயீஷாவை திருமணம் செய்தார்.

பின் விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை நிறுவிய பிறகே திருமணம் செய்து கொள்ள போவதாக கூறினார். பின்பு விஷாலும், நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி சரத்குமாரும் காதலித்து வருவதாக பல வதந்திகள் வந்தது. மேலும் விஷாளுக்கும் 2019-ம் ஆண்டு விளையாட்டு வீராங்கனையான அனிஷா ரெட்டிகும் நிச்சியதார்தம் நடந்து முடிந்தது. சமீபத்தில் அனிஷா தனது சமூக வலைத்தளத்தில் விஷாலுடன் இணைத்து எடுத்த புகை படத்தையும் நீக்கி இருந்தார்.

இந்த நிலையில் விஷால்-32 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகர் விஷால் தற்போது தன் கவனத்தை நடிப்பில் செலுத்தி வருகிறார். இந்த திரை படத்தில் பிரபல நடிகை சுனைனா நடித்து வருகிறார். நடிகர் விஷால் கடந்த 9 வருடத்திற்கு முன் வெளியான சமர் படத்தில் சுனைனாவுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
