கதறி அழுத ஆர்யன் கான். ஷாருக் கானிற்கு பிரபல இயக்குனர் ஆறுதல்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் சிக்கியதை அடுத்து வழக்கின் விசாரணை தீவிரமாகி உள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி ஆர்யன் கான் அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பையில் இருந்து கோவா செல்லவிருந்த கார்டெயேல்ல (Cordelia) என்கிற சொகுசு கப்பலில் சனிக்கிழமை (02-10-2021) நடு இரவு சோதனை நடத்திய Narcotics Control Bureau (NCB) சட்டவிரோதமாக உபயோகிக்கப்பட்ட cocaine, hashish மற்றும் MD போன்ற போதை பொருட்களை கைப்பற்றினர்.
முன்னதாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள கப்பலில் நடக்கவிருக்கும் பார்ட்டியை பற்றிய ரகசிய தகவல் தங்களுக்கு கிடைத்ததாக NCBயின் உயர் அதிகாரி சமீர் வான்கடே தெரிவித்துள்ளார். சாதாரண பயணிகள் போல் கப்பலில் நுழைந்த NCB அதிகாரிகள் சந்தேகம் ஏற்படா வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் TOI வெளியிட்டுள்ள NCBயின் அறிக்கையின் படி 13 கிராம் கோகேயின், 5 கிராம் எம்டி, 21 கிராம் கராஸ் மற்றும் 22 எக்ஸ்டஸி மாத்திரைகள் உட்பட தடைசெய்யப்பட்ட போதை பொருட்களும் 1.33 இலட்சம் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NCBயின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மும்பையில் இருந்து கோவா செல்லும் கார்டியேல்லா என்னும் சொகுசு கப்பலை சோதனை செய்ததை அடுத்து ஆர்யன் கான் மற்றும் அவரது கூட்டாளிகள் போதை பொருள் வைத்திருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து ஆர்யன் கான் மும்பையிலுள்ள NCBயின் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். சமீபத்தில் வெளியாகி உள்ள இந்தியா டுடே அறிக்கையின் படி , ஆர்யன் கான் விசாரணையின் போது பயத்தில் கதறி அழுததாகவும் அவர் நான்கு வருடமாக போதை பொருள் உட்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
அர்பாஸ் மெர்ச்சன்ட் என்கிற ஆர்யன் கானின் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கப்பலில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, அர்பாஸ் தன்னுடைய காலணிக்குள் போதை பொருளை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதற்கிடையில் பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா “தன்னுடைய பிள்ளை இந்த மாதிரி சிக்கலில் மாட்டிக்கொள்வதை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை பெற்றோருக்கு மிகுந்த வலியை கொடுக்கும். சட்டத்திற்கு முன்பாக மக்கள் ஒரு முடிவுக்கு வருவது மேலும் சிக்கலை உண்டாக்கக்கூடும். இது பெற்றோருக்கும் பெற்றோர்-பிள்ளை உறவிற்கும் அவமரியாதையாகவும் தர்மத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்க கூடும். உங்கள் கூட நான் இருக்கிறேன் ஷாருக்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கார்டியேல்ல கப்பல் நிர்வாகம் தங்களுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சிக்காக அன்றைய தினம் கப்பல் புறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இன்று மதியம் ஆர்யன் கான் கோர்ட்டில் ஆஜர் படுத்தபடுவர் என கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுபுர் சதீஜா, இஷாமீட் சிங் சத்தா, மொஹாக் ஜெய்ஸ்வால், கோமிட் சோப்ரா மற்றும் விக்ராந்த் சோக்கர் ஆகியோரும் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பருடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளனர்.