கதாநாயகனாக களம் இறங்கும் இளம் இயக்குனர்!

2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி திரைபடத்தை இயக்கியவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்படம் இயக்குனராக பிரதீபின் முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் 90’s கிட்ஸ்களின் பள்ளி பருவங்களிலும் மற்றும் வாழ்க்கையில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை சுவாரஸ்யமாக இயக்குனர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி மற்றும் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர் யோகி பாபு, சம்யுக்தா இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் மூலம் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து இருந்தார்.

கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் தான் இயக்கிய கோமாளி திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார். இவர் தற்போது இயக்குனர் இல் இருந்து கதா நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்பதை இவர் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது முதல் முதலில் ஏஜிஎஸ் புரோடக்சன் ஒரு கதாநாயகனை அறிமுகம் செய்கிறது. மேலும் அந்த கதாநாயகன் நான் தான் என்றும் இதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.
