ருத்ர தாண்டவம் Simply Waste!!

மோகன் .ஜி இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் ருத்ர தாண்டவம். இந்த திரைப்படத்தில் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தர்ஷ குப்தா அறிமுகமமாகி உள்ளார். மேலும் இந்த திரை படத்தில் தம்பி ராமையா, ராதாரவி, மனோபாலா, கெளதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்து இருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜூபின் இசை அமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தில் சொல்லக்கூடிய அளவிற்கு கதை என்று எதுவும் இல்லை.

படத்தின் கதைக்காவலராக இருக்கும் ரிச்சர்ட் ரிஷி நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்கிறார். தான் இருக்கும் ஊரில் போதை பொருட்கள் புழக்கவம் அதிதிகமா இருப்பதால் படத்தின் தொடக்கத்திலே போதை பொருள்களால் பெண்களுக்கு வரும் ஆபத்தை தடுத்து நிறுத்துகிறார். படத்தின் தொடக்கத்தில் நடிப்பை அளவுக்கு மீறி அள்ளிவிட்டு இருக்கிறார் ரிஷி. பின்பு இவரை காசிமேடு பகுதியில் உள்ள காவல் அலுவலகத்திற்கு பனி மாற்றம் செய்கிறார்கள். அங்கும் போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதால்.

ஆனால் ரிச்சர்ட் ரிஷி அங்கு சாலையில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த இரண்டு சிறுவர்களை கைது செய்யும் பொது அவர்கள் தப்பியோட முயன்ற பொது அவர்களின் இருசக்கர வாகனத்தை காலால் எட்டி உதைக்க, சிறுவர்கள் இருவருக்கும் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்புவார்கள், ஆனால் எதிர் பாரத விதமாக அதில் ஒரு சிறுவன் இறந்து விட, போலீஸ் வேலையை இல்லகிறார் ரிச்சர்ட். பின்பு இந்த வழக்கில் இருந்து தான் நிரபராதி என்பதை நிரூபிக்க போராடுவதே படத்தின் முழுக்கதை.

ஆனால் இதற்கு நடுவில் பிசிஆர் சட்டத்தை பற்றியும், கிரிப்டோ கிறிஸ்டியனை பற்றியும், பட்டியலின மக்களை பற்றி தனது இடது கருத்துக்களை நேரடியாக கூறாமல் சிறிது பயத்துடனே வசனத்தை எழுதி உள்ளார். மோகன் தொடர்ந்து தனது படத்தில் பட்டியலின மக்கள் பற்றி தவறுதலாக சித்தரித்து வருகிறார். இவரின் முதல் படத்தில் பட்டியலின இளைஞர்கள் உயர்சாதி பெண்களை காதலித்து ஏமாற்றுவதையே வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் என்று சித்தரித்து வந்தார். தற்போது இந்த திரைப்படத்தில் பட்டியலினா இளைஞர்கள் போதைப்பொருள் விற்பதை மட்டுமே தொழிலாக வைத்து இருகிறார்கள் என்பதை கூறுகிறார்.

மேலும் இந்த படத்தின் கதை ஒரு மைய கருத்தை மட்டும் கொண்டவாறு இல்லை.படத்தில் வசனத்தின் மூலம் கருத்துக்களை திணிக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு சரியாக இல்லை. படத்திற்கு இசை சிறிதளவும் ஏற்றவாறு இல்லை. படத்தில் ரிச்சர்ட் ரிஷி, கெளதம் வாசுதேவ் மேனன், தர்ஷகுப்தா நடிக்க தவறிவிட்டனர். ராதா ரவி, தம்பி ராமையா மற்றும் சிலர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து உள்ளனர். வில்லனாக நடித்த கெளதம் வசனத்தை மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார்.

படத்தின் இறுதி கட்டத்தில் உணர்ச்சிபூர்வமான காட்சிகளை அல்லி தெளிக்க விட்டு இருக்கிறார். படத்தி இறுதி கட்சியில் அமைந்து இருக்கும் வசனம் “எந்த மாதத்தில் பிறந்தேனோ அப்படியே மண்ணுக்குள் போக விரும்புகிறேன் ” என்ற வசனம் தேவையற்றது. இந்திய நாட்டில் ஒருவன், தான் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது அவனவன் தனிப்பட்ட விருப்பு,வெறுப்பு. அதை தவறு சேரி என்று கூறுவது தவறு.இப்படி பட்ட சாதி, மத வேறுபட்டு படங்கள் இனி தமிழ் சினிமாவில் வராமல் இருப்பதே நல்லது.
