ஓ.டி.டியில் ரிலீஸ் ஆகும் தனுஷின் இந்தி படம்!

நடிகர் தனுஷ் தனது படங்கள் ஓ.டி.டியில் வெளியாவதை விரும்புவதில்லை. அவர் நடித்த ஜகமே தந்திரம் படத்தை தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய முயற்சி நடந்தபோது எதிர்த்தார். தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் சினிமா ஆர்வலர்கள் ரசிகர்களை போல் நானும் ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என்று நம்பிக்கையில் இருந்தேன் என்று கூறினார். ரசிகர்களும் படத்தை ஓ.டி.டி.க்கு கொடுக்கக்கூடாது என்று கண்டித்தனர். அதையும் மீறி ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி.டியில் வெளியிட்டுவிட்டனர்.

Extraordinary Performer": Karthik Subbaraj On Directing Dhanush In Jagame  Thandhiram

இந்த நிலையில் தனுஷ் இந்தியில் நடித்துள்ள அந்த்ராங்கி ரே படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அக்ஷய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் பிரபல இந்தி நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா நாயகியாக நடித்திருக்கிறார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Sara Ali Khan Wraps Atrangi Re With A Heartwarming Note For Akshay Kumar  And Dhanush

படத்தை டிசம்பர் மாதம் ஓ.டி.டி.யில் வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக தற்போது தகவல் பரவிவருகிறது ஆனாலும் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்து படக்குழுவினர் தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Dhanush's Christmas celebration with Sara Ali Khan, photos are viral -  B4Blaze | DailyHunt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…