விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதி வேகமாக நடைபெற்று வருகிறது. ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். தளபதி 65 பொங்கலன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடியாத நிலையில் ‘பீஸ்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடைகால விடுமுறையின் போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தளபதி-66 யின் புதிய அப்டேடை தளபதி-66 குழுவினர் வெளியிட்டுள்ளனர். தளபதி-66 திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்சி இயக்குகிறார். மேலும் அந்த திரைப்படத்தை ராஜு, சிரிஷ் தயாரிக்கின்றனர்.இப்படி தொடர்ச்சியாக தளபதி ரசிகர்களுக்கு தளபதி இன்ப செய்திகளை கொடுத்து வந்த இந்த நிலையில் தளபதி ரசிகர்கள் செய்த காரியத்தால் தளபதி வருத்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக நடிகர் விஜய்யை வெவ்வேறு அரசியல் தலைவர்கள் போல சித்தரித்து அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இது இணையத்தில் பெரும் கிண்டலுக்கும், கண்டனத்துக்கு உள்ளாகி வந்தது. பிண அறையில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனால் இதை கண்டித்தும், ரசிகர்களை எச்சரித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சிலர் ஆர்வமிகுதியாலும், ஆர்வக் கோளாறாலும் விஜயை பிற தலைவர்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தை உள்ளடக்கி போஸ்டர்களை வெளியிட்டு வருவது சமீபகாலமாக வழக்கமாகி வருகிறது.
சில ரசிகர்கள், இயக்கத்தினரின் இச்செயல்களை அவ்வப்போது விஜய் அனுமதியோடு கண்டித்து உள்ளேன். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும் இயக்கத்தினர் அதுபோன்ற செயலில் ஈடுபடுவது வருத்தத்திற்கு உரியது. இதை விஜயும் விரும்புவதே இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில் விஜய் அனுமதி பெற்று இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.