சூப்பர் சிங்கரை இனி பிரியங்கா தொகுத்து வழங்கமாட்டார்!

விஜய் தொலைக்காட்சியில் பல ஷோக்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். தற்போது கோரோனோ பரவல் காரணமாக சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது பெரியவர்களுக்கான புதிய சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மேலும் இந்த சீசனில் ஜெயிக்கப்போவது யார் என்று கருத்துக்கணிப்புகள் நிறைய நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது பிக் பாஸ் சீசன் 5யில் சூப்பர் சிங்கர் ஐ தொகுத்து வழங்கிய பிரியங்கா தேஷ்பாண்டே கலந்துகொள்ளப் போவதாக பல வதந்திகள் வந்தன.

அதனை உறுதிப் படுத்துவது போல புதிய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கு மேல் வரப்போகும் சில சூப்பர் சிங்கர் எபிசோடுகளை குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்க இருக்கிறார் என்று அவரே மறைமுகமாக தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
