ரஜினியின் ‘அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டதால் மேலும் 2 படங்களில் நடிப்பதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று (செப்டம்பர் 10) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து முழுக்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடித்துள்ளார் ரஜினி. மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிடவுள்ளது.

ரஜினி கையில் அரிவாளுடன் இருக்கும் தோற்றம் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்து கதையம்சத்தில் தயாராகியுள்ளது. சிவா இயக்கும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய நான்கு கதாநாயகிகள் நடித்து உள்ளனர். அடுத்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய பிரபலமான தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது ரஜினிக்கு 169 ஆவது படம்.

இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 170 படத்தை டைரக்ட் செய்ய இருப்பதாகவும் ரஜினி மகள் ஐஸ்வர்யா.சவுந்தர்யா, ஆகியோர் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் இது உறுதிபடுத்தப்படவில்லை. தனுஷ் ஏற்கனவே ராஜ்கிரண் நடித்த ப. பாண்டி படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…