படவாய்ப்புக்காக விளம்பரம் தேடவில்லை- நடிகர் கனகா!

கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான கனகா முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், பிரபு, கார்த்திக் உள்ளிட்டோரின் படங்களில் நடித்திருக்கிறார்.

1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகிய அவர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் தனக்கு மீண்டும் நடிக்க ஆசை உள்ளது என்றும், இதற்காக சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கற்க போகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.அந்த வீடியோவைப் பார்த்த சிலர் மீண்டும் சினிமா வாய்ப்பு பிடிக்க விளம்பரம் தேடும் முயற்சியாக வீடியோ வெளியிட்டிருக்கிறார் என்று கனகா விமர்சித்தனர்.

இதற்கு விளக்கம் அளித்த கனகா வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில், நான் சினிமாவில் நடிக்க விளம்பரம் தேடி வீடியோ வெளியிடவில்லை. சினிமாவைப் பற்றி இதுவரை எதுவும் கற்றுக் கொள்ளாமல் இருந்த நான் புதிதாக கற்கலாமா என்று யோசிப்பததாக தெரிவித்து இருந்தேன்.உடனே பலரும் நான் விளம்பரத்திற்காகவும் திரிவார் வாய்ப்புகளுக்காக வீடியோவை வெளியிட்டு இருப்பதாக விமர்சிக்கிறார்கள். உங்களுடன் பேசவே வீடியோ விட்டேன் என்று கூறியுள்ளார்.
