பிக் பாஸ் சீசன்- 5யில் கலந்து கொள்ள மாட்டேன்-நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும் மக்கள் மத்தியில் வெற்றி பெற்ற ஒரு நிகழ்ச்சியாகவே இருக்கிறது. தற்போது சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 5 சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. இந்நிலையில் பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக பலரும் சமூக வலைத்தளத்தில் செய்திகளை பகிர்ந்து வந்தனர். இதற்கு லட்சுமி ராமக்ரிஷ்ன, நான் பிக் பாஸ் சீசன்-5ல் கலந்துக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரை பார்க்கிறேன். நான் பிக்பாஸ் தமிழ் 5-ம் சீசனில் இல்லை. பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் 5-ல் லட்சுமி ராமகிருஷ்ணன் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…