உடல் தோற்றத்தை கண்டு கவலைப்படுவது இல்லை -இலியானா!

தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நண்பன் மற்றும் கேடி படங்களில் நடித்துள்ள இலியானா இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். தனக்கு ஏற்பட்ட உருவ கேலி அனுபவங்கள் குறித்து இலியானா அளித்துள்ள பேட்டியில், ஒரு சமயத்தில் நான் உறுதியாக இருந்தேன். எடையும் குறைவாக இருந்தது. உடல் ரீதியான பிரச்சினைகளும் இருந்தன. அப்போது என்னைப் பார்த்த சிலர் கேலியாக சிரிப்பார்கள். மேலும் என்னைப் பார்த்து இன்னும் பலர் தகாத வார்த்தைகளால் பேசினார்கள்.

அந்த காயம் இப்போதும் எனக்குள் ஆறாமல் இருக்கிறது. பின்னர் மருத்துவர்கள் உதவியோடு தன்னம்பிக்கையே வளர்த்தேன். உலகில் உள்ள எல்லோரும் பரிபூரணமாக இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு குறை இருக்கும். நாம் அதைத் தெரிந்து கொண்டு சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். எல்லோருக்குமே தன்னம்பிக்கை இருக்க வேண்டும். மற்றவர்கள் கேலி யை கண்டு கொள்ளக் கூடாது. அவற்றை எதிர்கொள்ளும் சக்தி வேண்டும். என்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதுதான் முக்கியம். மற்றவர்கள் நினைப்பது தேவையில்லாத விஷயம். எனது உடலோடு தான் சேர்ந்து வாழ்வேன். இப்போது எனது உடல் தோற்றத்தை நினைத்து கவலைப்படுவது இல்லை என்றார்.
