8 வயதில் தந்தையை இழந்தேன்!

தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள, ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.எனக்கு சினிமா பின்னணி இல்லை. நடிகையான எனது பயணமும் சுலபமாக இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு உயர்ந்துள்ளேன். எனது குடும்பம் சென்னை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தது. 8 வயதில் தந்தையை இழந்தேன். படிக்காத எனது அம்மா குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். அம்மாவுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் மும்பை சென்று புடவைகள் வாங்கி வந்து கொஞ்சம் அதிக விலைக்கு வித்து சென்னையில் விற்பனை செய்தார்.

எனக்கு பெரிய கனவு எதுவும் இல்லை. சினிமாவில் முயற்சி செய்தபோது எத்தனை தடைகள் வருமோ அத்தனையும் வந்தது. எல்லாவற்றையும் எதிர்கொண்டேன். பாலியல் ரீதியாக எனது உருவம், தோற்றம், முகம், சரும நிறம் போன்றவற்றை வைத்து கொடூரமாக கேலி செய்தார்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். எனது முதல் படம் சரியாக ஓடவில்லை. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போதும் எனது சினிமா வாழ்க்கை போராட்டம் தான் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொறியியல் கலந்தாய்வு ! 26ல் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ் ! பிஇ, பிடெக் படிக்க 2.24 லட்சம் பேர் விண்ணப்பம்..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்…