அருள்நிதியின் ‘தேஜாவு ‘

மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்வதில் தேர்ந்தவர், அருள்நிதி. தற்போது, ‘தேஜாவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மாறுபட்ட திகில் படம். மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
கே.விஜய் பாண்டி, பி.ஜி.முத்தையா ஆகிய இருவரும் தயாரிக்க புதுமுக டைரக்டர் அரவிந் சீனிவாசன் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஒரு பெண் திடீரென்று காணாமல் போகிறாள். அவளைக் கண்டுபிடிக்க கதாநாயகன் துப்பறிவதும், அதனால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும் தான் திரைக்கதை.
இதில் அருள்நிதி, மதுபாலா ஆகிய இருவரும் போலீஸ் அதிகாரிகளாகவும், ஸ்முருதி வெங்கட் காணாமல் போகும் பெண்ணாகவும் நடித்துள்ளார்.