திகில் படத்தில் கவனத்தை செலுத்தும் நயன்!

நயன்தாரா ஏற்கனவே மாயா, ஐரா, ஆகிய திகில் படங்களில் நடித்துள்ளார். மாயா படத்தில் பேயாகவும் வந்தார். தற்போது இன்னொரு திகில் திரை படத்திலும் நடிக்கிறார். குடும்ப உறவுகள், பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட படமாக எடுக்கவிருக்கிறார்கள். இந்த படத்திற்கு இன்னும் பெயரை வைக்கவில்லை என்றும், இதை புதுமுக இயக்குனரான விக்னேஷ் இயக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.மேலும் படப்பிடிப்பை மதுரையிலும் சென்னையிலும் ஒரே கட்டமாக எடுத்து படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். நயன்தாராவுக்கு ஏற்கனவே ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்கள் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கிறாராம்.
நெற்றிக்கண் படம் விரைவில் வெளியாக உள்ளது.மேலும் அண்ணாத்த படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. மேலும் 6 திரைப்படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளார். இறந்து திரைப்படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறாராம்.