வனிதாவுக்கு பவர் ஸ்டாருடன் திருமணமா?

கடந்த சில நாட்களாக பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்றும், மாலை மாற்றிக் கொள்வது போன்றும், தாலி கட்டுவது போன்றுமான புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வனிதாவே பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வனிதா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள் என்றும் அந்த புகைப்படங்கள் தான் இவை என்றும் கூறப்பட்டு வந்தன. இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.