தல அஜித்துக்கு நன்றி தெரிவித்த ‘சார்பட்டா பரம்பரை’ வேம்புலி!

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இத்திரைப்படம் நேற்று அமேசானில் வெளியானது. அணைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தற்போது தல அஜித் அவர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் ஜான் கொக்கின் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கலில் நடித்து இருக்கிறார். இவர் வீரம், பாகுபலி ,கே.ஜி.எப் போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த பிறகு ட்விட்டரில் தல அஜித் அவர்களுக்கு நன்றி கூறி ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.மேலும் அதில் தன்னை ஊக்கப்படியதற்கும், தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு தல அஜித் அவர்களுக்கு நன்றி கூறி வேம்புலி கதாபாத்திரத்தை தல அஜித் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.