வைரலாகும் உதயநிதி ஸ்டாலின் திருமண புகைப்படம்!

மறைந்த முன்னாள் முதல்வர் மு .கருணாநிதி அவர்களின் பேரனும், தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் பல அங்கீகாரத்துடன் திரையுலகில் இறங்கினார். முதலில் அவர் படங்கள் தயாரிப்பது ,விநியோகம் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு இருந்தார்.
பின்பு அவர் நகைச்சுவை திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மக்களிடையே அவருக்கு பலத்த வரவேற்பு இருந்தது. இந்த காரணத்தால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். பிரபல நடிகராக மாறினார். அதே போன்று தற்போது தந்தையுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு உதவி செய்துவருகின்றார்.
இவரது மனைவி கிருத்திகாவும் இவரும் காதல் திருமணம் செய்தது ஊர் அறிந்தது. ஆனால் இப்போது இவர்கள் திருமணத்தின் போது எடுத்த திரைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல விமர்சனங்களை பெற்று வந்துள்ளது. இப்படியாய் இருந்தார் உதயநிதி ஸ்டாலின் அவரது திருமணத்தின்போது என்று பலரும் ஆச்சரியப்படும் படி அந்த புகைப்படம் அமைந்துள்ளது.