போட்டோ மூலம் ரசிகர்களை கவரும் டிடி!

கடந்த 20பது ஆண்டுகளாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் டிடி அவர்கள் காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர்.
தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் டிடி அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
மேலும் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் டிடி அவர்களுக்கு 36 வயது என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் இன்னும் டீன் ஏஜ் இளம் பெண் போல் தோற்றம் அளிக்கிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். டிடியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.