சிவாவுக்கும் அனிருத்துக்கும் நன்றி கூறிய கவின்!

பிக் பாஸ் போட்டியாளரும் சின்னத்திரை நடிகருமான கவின் தற்போது வெள்ளித்திரை பக்கம் தன் கால்களை பதித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் ஒப்பந்தமான திரைப்படம் ‘லிப்ட்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் படக்குழுவினர்.
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘ஹே ப்ரோ’ என்ற பாடல் ஜூலை 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார் என்பதும் மேலும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பாடலை பாடிக் கொடுத்த சிவாவுக்கும், பாடலை வெளியிட சம்மதித்த அனிருத்துக்கும் இன்ஸ்டாகிராமில் பதிவுமூலம் நன்றியை தெரிவித்துள்ளார் கவின்.